டிஎன்பிஎல்: மழை காரணமாக திண்டுக்கல் - திருப்பூர் அணிகள் மோதும் போட்டி பாதிப்பு
மழை நின்ற பின் போட்டி சில ஓவர்கள் குறைக்கப்பட்டு தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சேலம்,
8 அணிகள் பங்கேற்கும் 7-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தற்போது சேலத்தில் நடைபெற்று வருகிறது..
டி.என்.பி.எல். தொடரின் 20-வது 'லீக்' ஆட்டம் இன்று இரவு நடக்கிறது. இதில் ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.
டாஸ் போடப்பட்ட பிறகு சேலம் மைதானம் அமைந்துள்ள பகுதியில் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் போட்டியை தொடங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மழை நின்ற பின் போட்டி சில ஓவர்கள் குறைக்கப்பட்டு தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.