எனது கடின உழைப்புக்கு கிடைத்த வெகுமதி...இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டது குறித்து ராகுல் திரிபாதி நெகிழ்ச்சி
ராகுல் திரிபாதிக்கு இந்திய அணியில் முதல் முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.;
மும்பை,
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 20 ஓவர் தொடர் முடிந்த பிறகு அயர்லாந்து அணிக்கு எதிரான 20 ஓவர் தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. அயர்லாந்தில் நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
இந்த அணியில் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வந்த ராகுல் திரிபாதிக்கு இந்திய அணியில் முதல் முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முதல் முறை இந்திய அணிக்கு தேர்வு செயப்பட்டது குறித்து ராகுல் திரிபாதி கூறுகையில் ;
இது மிகப்பெரிய வாய்ப்பு. என்னுடைய கனவு நனவாகி இருக்கிறது. "தேர்வுக்குழுவினர் மற்றும் அனைவரும் என்னை நம்பியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். என் கடின உழைப்புக்கு கிடைத்த வெகுமதி . ஆடும் அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தால், நான் முயற்சி செய்து என்னால் முடிந்த சிறந்ததை அணிக்கு செய்வேன் என்று தெரிவித்துள்ளார் .