உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் மோத போகும் அணி இது தான் - மிட்செல் மார்ஷ்

உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறும் இரு அணிகள் குறித்து மிட்செல் மார்ஷ் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

Update: 2023-09-10 09:53 GMT

கேப்டவுன்,

இந்தியாவில் வரும் அக்டோபர் 5-ஆம் தேதி துவங்கும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது நவம்பர் 19-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது.

இந்த உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டதிலிருந்து இந்திய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் மற்றும் அணித்தேர்வு குறித்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அதேபோல் அணியில் இடம் பெறாத வீரர்கள் குறித்தும் பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

மேலும், உலகக்கோப்பை தொடரில் எந்த அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும், இறுதிப்போட்டிக்கு முன்னேறும், சாம்பியன் பட்டம் வெல்லும் அணி எது என்பது குறித்து பல்வேறு வீரர்கள் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை தொடரில் இறுதிப்போட்டியில் விளையாடும் இரு அணிகள் குறித்து ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் தனது கருத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

என்னை பொருத்தவரை நேர்மையாக சொல்ல வேண்டுமென்றால் எதிர்வரும் 50 ஓவர் உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் தான் இறுதிப்போட்டியில் விளையாடும் என தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நடைபெற இருக்கும் இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியே கோப்பையை கைப்பற்ற சாதகம் அதிகம் என்று பலரும் பேசி வரும் வேளையில் மிட்சல் மார்ஷ் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் தான் இறுதிப்போட்டியில் விளையாடும் என்று கூறியுள்ளது பலரது மத்தியிலும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்