சர்வதேச கிரிக்கெட்டில் இவரை போன்ற ஒரு பேட்ஸ்மேன் கிடையாது - இந்திய வீரரை பாராட்டிய வாசிம் அக்ரம்

நடப்பு உலகக்கோப்பை தொடரில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளன.;

Update:2023-11-13 12:50 IST

Image Courtesy: AFP

கராச்சி,

இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இந்த தொடரில் நேற்றுடன் லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவு பெற்றன. லீக் சுற்று ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளன. அரையிறுதி ஆட்டங்கள் நாளை மறுநாள் தொடங்குகிறது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்ற பின்னர் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் பேட்டிங் குறித்து பாகிஸ்தான் முன்னாள் கேப்டனான வாசிம் அக்ரம் தனது கருத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

சர்வதேச கிரிக்கெட்டில் ரோகித் சர்மா போன்ற ஒரு பேட்ஸ்மேன் கிடையாது. நம்மில் பலரும் கோலி, ரூட், வில்லியம்சன், பாபர் அவர்களை பற்றி மட்டுமே பேசுகிறோம்.

ஆனால் ரோகித் சர்மா அனைவரையும் விட வித்தியாசமானவர். எதிரணியின் பந்துவீச்சு எப்படி இருந்தாலும் அதனை எளிதாக மாற்றி அதிரடியாக ரன்களை குவித்து அசத்துகிறார்.

அவரது சிறப்பான அதிரடி துவக்கம் காரணமாகவே இந்திய அணி பெரிய ரன்களை குவிக்கிறது. ரோகித் சர்மா தற்போது இருக்கும் பார்மில் அவருக்கு பந்துவீச எந்த ஒரு பந்துவீச்சாளருக்கும் சற்று கடினமாகதான் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்