அவுட் கொடுக்காத நடுவர் ..... அடுத்த நொடியே டி.ஆர்.எஸ். எடுத்து விக்கெட்டாக மாற்றிய தோனி...! வீடியோ

அவரது அந்தத் திறமையில் இன்றளவும் மாற்றம் இல்லை. ரசிகர்கள் இந்த டி ஆர் எஸ்-யை தோனி ரிவ்யூ சிஸ்டம் என்று சொல்வார்கள்

Update: 2023-04-09 09:07 GMT

மும்பை,

ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த 12-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த மும்பை 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது.

158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் 18.1 ஓவரில் 3 விக்கெட் இழந்து 159 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் மும்பை இந்தியன்சை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றிபெற்றது.

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ரஹானே 19 பந்துகளில் அரைசதம் அடித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இறுதியில் 27 பந்துகளில் 7 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 61 ரன்கள் குவித்த ரஹானே கேட்ச் மூலம் அவுட் ஆனார். ஆனால், ருதுராஜ் கெய்குவாட் மற்றும் அம்பதி ராயுடு ஜோடி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு வழிவகுத்தது.

இந்த நிலையில் இந்த போட்டியில் சென்னை அணியின் சான்ட்னர் பந்துவீச்சை எதிர்கொண்ட சூரியகுமார் யாதவ் ஸ்வீப் ஆட முயன்றார் . அப்போது பந்து பேட்டில் உரசி சென்றது . இதனை தோனிஅற்புதமாக கேட்ச் பிடித்தார்.

நடுவரிடம் அவுட் அப்பில் கேட்ட பொழுது அவர் வைட் கொடுத்தார் தரவில்லை. இதனால் தோனி அடுத்த நொடியே டி. ஆர்.எஸ் எடுத்தார். . அதில் பந்து பேட்டில் உரசி சென்றது தெரிந்தது. இதனால் மூன்றாவது நடுவர் அவுட் கொடுத்தார் .இதனால் சூரியகுமார் யாதவ் வெளியேறினார்.

டிஆர்எஸ் விஷயத்தில் தோனி எப்பொழுதும் தவறுவதே கிடையாது. அவர் மூன்றாவது நடுவரிடம் சென்றால் அது பெரும்பாலும் அவுட் ஆகத்தான் இருக்கும். அவரது அந்தத் திறமையில் இன்றளவும் மாற்றம் இல்லை. ரசிகர்கள் இந்த டி ஆர் எஸ்-யை தோனி ரிவ்யூ சிஸ்டம் என்று சொல்வார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்