நியூசிலாந்து தொடர் இவர்களுக்கு சிறந்த கற்றல் அனுபவமாக இருக்கும் - ஜாகீர் கான்

நியூசிலாந்து தொடர் இவர்களுக்கு சிறந்த கற்றல் அனுபவமாக இருக்கும் என இந்திய முன்னாள் வீரர் ஜாகீர் கான் தெரிவித்துள்ளார்.

Update: 2022-11-12 11:44 GMT

Image Courtesy: Indian Premier League

மும்பை,

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் இங்கிலாந்திடம் படுதோல்வி அடைந்து இந்திய அணி வெளியேறியது. இந்த நிலையில் அடுத்ததாக இந்திய அணி நியூசிலாந்திற்கும் அதை தொடர்ந்து வங்காளதேசத்திற்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள், டெஸ்ட் தொடர்களில் விளையாடுகிறது.

நியூசிலாந்து மற்றும் வங்காளதேச சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) கடந்த மாதம் அறிவித்தது. முதலில் நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி ஒருநாள் மற்றும் 20 ஓவர் தொடர்களில் விளையாடுகிறது.

இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் நவம்பர் 18 முதல் நவம்பர் 22 வரை நடைபெறுகிறது. இதை தொடர்ந்து ஒருநாள் தொடர் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நவம்பர் 25-ல் தொடங்குகிறது. நியூசிலாந்திற்கு எதிரான தொடரில் கோலி, ரோகித் சர்மா ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

இதனால் டி20 தொடரில் இந்திய அணியை ஹர்திக் பாண்டியா வழிநடத்துகிறார். ஒருநாள் போட்டியில் தவான் அணியை வழிநடத்துகிறார். இந்த நிலையில் நியூசிலாந்து தொடரில் பயிற்சியாளர் டிராவிட்-க்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் வி.வி.எஸ் லட்சுமண் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த தொடர் குல்தீப் சென் மற்றும் உம்ரான் மாலிக்குக்கு சிறந்த கற்றல் அனுபவமாக இருக்கும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஜாகீர் கான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும் போது,

இந்த தொடர் சிறந்த அற்புதமான தொடராக இருக்கும், மேலும், இந்த தொடர் குல்தீப் சென் மற்றும் உம்ரான் மாலிக்குக்கு சிறந்த கற்றல் அனுபவமாக இருக்கும். நியூசிலாந்தில் உள்ள மைதானங்களில் உம்ரான மாலிக் எவ்வாறு செயல்படுவார் என்பதை பார்க்க ஆவலுடன் இருக்கிறேன். நியூசிலாந்து பிட்சுகள் வழக்கமாக வேகப்பந்து வீச்சுக்கு உதவும். இந்த இந்திய ஜோடி இரு அணிகளுக்குக்ம் இடையில் வித்தியாசமாக இருக்க முடியும் என்றார்.

மேலும், நியூசிலாந்தில் முதல் முறையாக சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அனைத்து வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் ஒரு எச்சரிக்கை, வெலிங்டனில் பலத்த காற்றில் கவனமாக இருங்கள், அதற்கு எதிராக ஓடுவது கடினம். காற்றின் திசையிலேயே ஓடுகிறோம் என்றால் அது நம்மை தள்ளக்கூடும். எனவே எல்லா வகையிலும் தயாராக இருங்கள்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்