இறுதிப்போட்டியில் இந்திய அணி இந்த ஒரு மாற்றத்தை செய்ய வேண்டும் - சோயப் அக்தர்

இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிஆட்டம் நாளை நடைபெறுகிறது.

Update: 2024-06-28 13:56 GMT

Image Courtesy: AFP

பார்படாஸ்,

இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிஆட்டம் நாளை நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன. இரு அணிகளும் இந்த தொடரில் தோல்வியை சந்திக்காமல் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளன.

இதைத் தொடர்ந்து இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை தோற்கடித்து இந்திய அணி கோப்பையை வெல்லுமா என எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளை இந்தியா தோற்கடித்த விதத்தை பார்த்து தென் ஆப்பிரிக்காவுக்கு இந்நேரம் கொஞ்சம் பயம் ஏற்பட்டிருக்கும் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயப் அக்தர் கூறியுள்ளார்.

மேலும், இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றி பெற விராட் கோலியை 3வது இடத்திலும், ரிஷப் பண்ட் துவக்க வீரராகவும் விளையாட வைப்பது அவசியம் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, இந்த வெற்றிக்கு தகுதியான இந்தியாவுக்கு நான் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

இந்த உலகக் கோப்பையை அவர்கள் கண்டிப்பாக வெல்ல வேண்டும். இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா டாஸ் வென்றால் முதலில் பேட்டிங் செய்ய பார்க்க வேண்டும். அவர்கள் முதல் இறுதிப்போட்டியில் விளையாடுகின்றனர். இந்தியாவின் இந்த செயல்பாடுகளுக்குப் பின் தென் ஆப்பிரிக்காவும் கொஞ்சம் பயந்து இருக்கும். ஏனெனில் இந்தியாவின் இந்த ஸ்பின்னர்களுக்கு எதிராக யார் ரன்கள் அடிப்பார்கள்.

இந்தியா கண்டிப்பாக இம்முறை வெல்ல வேண்டும். அதற்கு ரிஷப் பண்ட் - ரோகித் சர்மா ஆகியோர் துவக்க வீரராகவும், விராட் கோலி மூன்றாவது இடத்தில் வருவதையும் நான் பார்க்க விரும்புகிறேன். விராட் கோலி தன்னுடைய இயற்கையான விளையாட்டை விளையாடினால் இந்தியாவின் பிரச்சினை தீர்ந்து விடும். ஏனெனில் ஓப்பனிங் அவருடைய ஆட்டம் கிடையாது.

பொதுவாக அவர் நேரம் எடுத்து சுமாரான பந்துகளை அடித்து ஸ்ட்ரைக் ரேட்டை முன்னேற்றுவார். விராட் கோலி இயற்கையான ஓப்பனர் கிடையாது. அதனால் பண்ட் துவக்க வீரர் வந்தால் இந்த பிரச்சனை தீர்ந்து விடும் என்று கருதுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்