அனைத்து வித கிரிக்கெட்டிலும் தற்போது மிகச்சிறந்த பவுலர் இவர்தான் - பிரட் லீ

நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

Update: 2024-07-12 03:37 GMT

கோப்புப்படம் 

மெல்போர்ன்,

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த வெற்றியை இந்திய ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இந்த தொடருடன் ரோகித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகிய சீனியர் வீரர்கள் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர்.

இந்த தொடரில் சிறப்பாக பந்துவீசி இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல அதிக அளவில் பங்காற்றிய ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ அனைத்து வித கிரிக்கெட்டிலும் தலைசிறந்த பந்துவீச்சாளரை தேர்ந்தெடுத்திருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறும்போது,

தற்போது அனைத்து வித கிரிக்கெட்டிலும் உலகின் சிறந்த பவுலராக இருப்பது பும்ரா தான். பும்ரா ஒரு தனித்துவமான விதிவிலக்கான பந்துவீச்சாளர். அவர் புதிய பந்தை கொண்டு பந்து வீசும் போது வேகத்தை கூட்டி வீசுகிறார். போட்டிகளில் விளையாடும் போது அவரது செயல்திறன் மற்றும் சிறந்த தலைமைத்துவ திறன்கள் வெளிப்படுகின்றன. டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் கொடுக்காமல் 15 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.

அவர் அபாரமான பவுலர். இந்த டி20 உலக கோப்பையை வெல்ல இந்திய அணி தகுதியானது. இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரை பார்த்தால் ஒவ்வொரு இடத்திலும் ஆதிக்கம் செலுத்தும் வீரர்கள் களமிறங்குகின்றனர். மிடில் ஆர்டர் வலுவாக உள்ளது. விரைந்து ரன் சேர்க்கும் அதிரடி ஆட்டக்காரர்களும் அணியில் உள்ளனர். இந்த பாராட்டுகளுக்கு எல்லாம் அவர்கள் பொருத்தமானவர்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்