பாகிஸ்தான் - நியூசிலாந்துக்கு இடையேயான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது..!

பாகிஸ்தான்-நியூசிலாந்துக்கு இடையேயான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது.

Update: 2023-04-16 21:09 GMT

லாகூர்,

பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி லாகூரில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுக்கு 192 ரன்கள் குவித்தது. கடைசி ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சருடன் தனது 3-வது சதத்தை நிறைவு செய்த கேப்டன் பாபர் அசாம் 101 ரன்களுடன் (58 பந்து, 11 பவுண்டரி, 3 சிக்சர்) களத்தில் இருந்தார். சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் கேப்டனாக 3 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனைக்கு பாபர் அசாம் சொந்தக்காரர் ஆனார்.

தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 154 ரன்களில் அடங்கியது. அதிகபட்சமாக மார்க் சாப்மேன் 65 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவுப் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்திய பாகிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 3-வது 20 ஓவர் போட்டி இதே மைதானத்தில் இன்றிரவு 9.30 மணிக்கு நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்