டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை; சரிவை சந்தித்த பாகிஸ்தான்

பாகிஸ்தானுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வங்காளதேசம் கைப்பற்றியது.

Update: 2024-09-04 06:09 GMT

Image Courtesy: AFP

துபாய்,

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடிய வங்காளதேசம் அந்த தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது. பாகிஸ்தானுக்கு எதிராக முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று வங்காளதேசம் சாதனை படைத்தது.

இந்நிலையில், பாகிஸ்தான் - வங்காளதேசம் இடையிலான டெஸ்ட் தொடருக்கு பின் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) அணிகளுக்கான டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.

இதில், முதல் இடத்தில் ஆஸ்திரேலியாவும் (124 புள்ளி), 2ம் இடத்தில் இந்தியாவும் (120 புள்ளி), 3வது இடத்தில் இங்கிலாந்தும் (108 புள்ளி), 4வது இடத்தில் தென் ஆப்பிரிக்காவும் (104 புள்ளி), 5வது இடத்தில் நியூசிலாந்தும் (96 புள்ளி) உள்ளன.

இலங்கை (83 புள்ளி) ஒரு இடம் ஏற்றம் கண்டு 6வது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் ஒரு இடம் ஏற்றம் கண்டு (77 புள்ளி) 7வது இடத்திலும் உள்ளன. வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த பாகிஸ்தான் (76 புள்ளி) இரண்டு இடம் சரிந்து 8வது இடத்திற்கு வந்துள்ளது.

வங்காளதேசம் (66 புள்ளி) 9வது இடத்திலும், அயர்லாந்து (26 புள்ளி) 10வது இடத்திலும், ஜிம்பாப்வே (4 புள்ளி) 11வது இடத்திலும், ஆப்கானிஸ்தான் (0 புள்ளி) 12வது இடத்திலும் தொடர்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்