டெஸ்ட் கிரிக்கெட்; ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் ஏற்றம் கண்ட ஜேசன் ஹோல்டர்

ஆடவருக்கான டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ளது.

Update: 2024-08-21 16:01 GMT

Image Courtesy: AFP 

துபாய்,

தென் ஆப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது. இதையடுத்து ஆடவருக்கான டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ளது.

இதில் பேட்ஸ்மேன்கள் பட்டியலில் இங்கிலாந்தின் ஜோ ரூட் (872 புள்ளி) முதலிடத்திலும், நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் (859 புள்ளி) 2ம் இடத்திலும், பாகிஸ்தானின் பாபர் அசாம் (768 புள்ளி) 3வது இடத்திலும் உள்ளனர். இந்தியா தரப்பில் ரோகித் சர்மா (751 புள்ளி) 6வது இடத்திலும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் (740 புள்ளி) 8வது இடத்திலும், விராட் கோலி (737 புள்ளி) 10வது இடத்திலும் உள்ளனர்.

பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் (870 புள்ளி) முதல் இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேசில்வுட், ஜஸ்ப்ரீத் பும்ரா (847 புள்ளி) ஆகியோர் 2வது இடத்திலும் உள்ளனர். வெஸ்ட் இண்டீசின் ஜெய்டன் சீல்ஸ் (687 புள்ளி) 13 இடங்கள் முன்னேறி தரவரிசை பட்டியலில் 13வது இடத்திற்கு முன்னேறி உள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆல் ரவுண்டர்கள் தரவரிசை பட்டியலில் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா (444 புள்ளி), ரவிச்சந்திரன் அஸ்வின் (322 புள்ளி) ஆகியோர் முதல் இரு இடங்களில் உள்ளனர். இந்த பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் ஜேசன் ஹோல்டர் (270 புள்ளி) 2 இடங்கள் உயர்ந்து 5வது இடத்திற்கு வந்துள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்