இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்: சிக்கந்தர் ராசா தலைமையில் களம் இறங்கும் ஜிம்பாப்வே

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான ஜிம்பாப்வே அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-07-01 15:19 GMT

Image Courtesy: @ZimCricketv

ஹராரே,

இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 6ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி சுப்மன் கில் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொடருக்கான இந்திய அணியில் கெய்க்வாட், ஜெய்ஸ்வால், ரியான் பராக், துருவ் ஜூரெல், துஷார் தேஷ்பாண்டே உள்ளிட்ட இளம் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில் இந்த தொடருக்கான ஜிம்பாப்வே அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொடருக்கான ஜிம்பாப்வே அணிக்கு சிக்கந்தர் ராசா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் நக்வி அறிமுக வீரராக இடம் பெற்றுள்ளார்.

ஜிம்பாப்வே அணி விவரம்: சிக்கந்தர் ராசா (கேப்டன்), பராஸ் அக்ரம், பிரையன் பென்னட், ஜொனாதன் கேம்ப்பெல், டெண்டாய் சதாரா, லூக் ஜாங்வே, இன்னசென்ட் கையா, கிளைவ் மடாண்டே, வெஸ்லி மாதேவெரே, தடிவானாஷே மருமணி, வெலிங்டன் மசகட்சா, பிராண்டன் மவுடா, பிளெசிங் முசரபானி, டையன் மையர்ஸ், ஆண்டம் நக்வி, ரிச்சர்ட் ங்கராவா, மில்டன் ஷும்பா.

 

Tags:    

மேலும் செய்திகள்