தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்: அயர்லாந்து அணி அறிவிப்பு

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடருக்கான அயர்லாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-09-13 10:10 GMT

image courtesy: ICC

டப்ளின்,

அயர்லாந்து - தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்கள் நடைபெற உள்ளன. இந்த தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து நடைபெற உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி வரும் 27-ம் தேதி தொடங்க உள்ளது.

இந்நிலையில் இந்த தொடர்களுக்கான அயர்லாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அயர்லாந்து டி20 அணி: பால் ஸ்டிர்லிங் (கேப்டன்), மார்க் அடேர், ராஸ் அடேர், கர்டிஸ் கேம்பர், கரேத் டெலானி, ஜார்ஜ் டோக்ரெல், பியோன் ஹேண்ட், மேத்யூ ஹம்ப்ரீஸ், கிரஹாம் ஹியூம், நீல் ராக், ஹாரி டெக்டர், லோர்கன் டக்கர், பென் ஒயிட், கிரேக் யங்.

அயர்லாந்து ஒருநாள் அணி: பால் ஸ்டிர்லிங் (கேப்டன்), மார்க் அடேர், ஆண்ட்ரூ பால்பிர்னி, கர்டிஸ் கேம்பர், ஜார்ஜ் டாக்ரெல், ஸ்டீபன் டோஹனி, கவின் ஹோய், பியோன் ஹேண்ட், கிரஹாம் ஹியூம், மேத்யூ ஹம்ப்ரீஸ், ஆண்டி மெக்பிரைன், நீல் ராக், ஹாரி டெக்டர், லோர்கன் டக்கர், கிரேக் யங்.

Tags:    

மேலும் செய்திகள்