டி20 உலகக்கோப்பை: நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு
நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.;
கீலாங்,
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டின் முதல் சுற்றில் ஏ பிரிவில் இன்று கடைசிகட்ட லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. அதில் கீலாங் ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்க நடைபெற உள்ள முதல் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இலங்கை அணி, நெதர்லாந்துடன் மோதுகிறது.
ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் உள்ள இலங்கை அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே சூப்பர்12 சுற்றுக்கு தகுதி பெற முடியும். 2 வெற்றியுடன் உள்ள நெதர்லாந்து ரன்ரேட்டில் பின்தங்கி இருப்பதால் அந்த அணிக்கும் வெற்றி அவசியமாகிறது. அதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
இந்த நிலையில் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.