டி20 உலக கோப்பை தொடர்: ஜிம்பாப்வே அணி அறிவிப்பு

டி20 உலக கோப்பை தொடருக்கான ஜிம்பாப்வே அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-09-16 10:06 GMT

ஹராரே,

8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. டி-20 உலக கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன.

நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும். முதல் சுற்றில் விளையாடும் அணிகளில் இருந்து அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும். இந்த நிலையில் இந்த உலககோப்பை தொடருக்கான ஜிம்பாப்வே அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

காயத்திலிருந்து மீண்ட கிரெய்க் எர்வின் ஜிம்பாப்வே அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கிரெய்க் எர்வின் தலைமையிலான ஜிம்பாப்வே அணி விவரம்:-

கிரேக் எர்வின் (கேப்டன்), ரியான் பர்ல், ரெஜிஸ் சகப்வா, தென்டை சதாரா, பிராட்லி எவன்ஸ், லூக் ஜாங்வே, கிளைவ் மடாண்டே, வெஸ்லி மாதேவேரே, வெலிங்டன் மசகட்சா, டோனி முனியோங்கா, பிளெசிங் முசரபானி, ரிச்சர்ட் ங்கராவா, சிக்கந்தர் ராசா, மில்டன் ஷும்பா, சீன் வில்லியம்ஸ்

காத்திருப்பு வீரரகள்: தனகா சிவாங்கா, இன்னோசண்ட் கயா, கெவின் கசுசா, தடிவானாஷே மருமணி, விக்டர் நியாச்சி

Tags:    

மேலும் செய்திகள்