டி20 உலகக்கோப்பை: புதிய அவதாரத்துடன் களம் இறங்கும் தினேஷ் கார்த்திக்.. ரசிகர்கள் மகிழ்ச்சி
டி20 உலகக்கோப்பை தொடருக்கான வர்ணனையாளர்கள் குழுவில் தினேஷ் கார்த்திக் இடம்பெற்றுள்ளார்.;
மும்பை,
20 அணிகள் கலந்து கொள்ளும் 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான வர்ணனையாளர் குழுவை ஐ.சி.சி. நேற்று அறிவித்தது.
அதில் நடப்பு சீசனுடன் ஐ.பி.எல். தொடரில் இருந்து ஓய்வு பெற்ற பெங்களூரு அணியை சேர்ந்த தினேஷ் கார்த்திக் இடம்பெற்றுள்ளார். இது அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பல டி20 உலகக்கோப்பை தொடர்களில் வீரராக களமிறங்கிய அவர், தற்போது வர்ணைனையாளர் என்ற புதிய அவதாரத்துடன் இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க உள்ளார்.
முன்னதாக இவர் கடந்த 2021-ல் வர்ணனையாளர் பணியை தொடங்கிய போதிலும், டி20 உலகக்கோப்பை தொடரில் வர்ணனை செய்யப்போவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.