டி20 உலகக்கோப்பை; இந்திய அணி படைத்த மகத்தான சாதனை

ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்கள் அனைவரும் அடுத்தடுத்து கேட்ச்களை கொடுத்து ஆட்டமிழந்தனர்.

Update: 2024-06-21 11:51 GMT

Image Courtesy: @BCCI / @JayShah

பார்படாஸ்,

டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்றின் 3-வது ஆட்டத்தில் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 53 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 32 ரன்களும் அடித்தனர்.

இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் 134 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றை தொடங்கி உள்ளது. இந்நிலையில் இந்த ஆட்டத்தில் இந்திய அணி புதிய சாதனை படைத்துள்ளது. அதாவது இந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்கள் அனைவரும் அடுத்தடுத்து கேட்ச்களை கொடுத்து ஆட்டமிழந்தனர்.

அந்த அணியின் 10 பேட்ஸ்மேன்களும் இந்தியாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்கள். இதன் வாயிலாக டி20 உலகக்கோப்பை வரலாற்றில் எதிரணியின் 10 விக்கெட்களையும் கேட்ச்களாக எடுத்த முதல் ஆசிய அணி என்ற அரிதான சாதனையை இந்தியா படைத்துள்ளது.

இதற்கு முன் கடந்த 2022 டி20 உலகக் கோப்பையில் இதே ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து அணி 10 விக்கெட்டுகளையும் கேட்ச்களாக எடுத்து அரிதான சாதனையை படைத்திருந்தது. அதன் பின் தற்போது இந்திய அணி இப்படி 10 விக்கெட்டுகளையும் கேட்ச்களாக எடுத்து சாதனையை படைத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்