ஐசிசி டி20 தரவரிசை: ரிஸ்வானை பின்னுக்கு தள்ளி சூர்யகுமார் யாதவ் முதலிடம்

டி20ஐ பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் முதல் முறையாக சூர்யகுமார் யாதவ் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

Update: 2022-11-02 10:52 GMT

Image Courtesy: PTI 

துபாய்,

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர்12 சுற்று முக்கியமான கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த தொடரில் இன்று நடைபெற்று வரும் போட்டியில் இந்தியா- வங்காளதேசம் அணிகள் மோதி வருகின்றன.

இந்த நிலையில் ஐசிசி இன்று வெளியிட்டுள்ள டி20ஐ பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் முதல் முறையாக சூர்யகுமார் யாதவ் (863 புள்ளிகள்) முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த பட்டியலில் நீண்ட காலமாக முதல் இடத்தில் இருந்த பாகிஸ்தான் அணியின் ரிஸ்வானை (842 புள்ளிகள்) பின்னுக்கு தள்ளி அவர் முதலிடம் பிடித்துள்ளார்.

அதே நேரத்தில் நியூசிலாந்தின் டெவோன் கான்வே 792 புள்ளிகளுடன் தனது மூன்றாம் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார். சூர்யகுமார் யாதவ் தவிர, டி20 பேட்ஸ்மேன்களுக்கான ஐசிசி தரவரிசையில் முதல் 10 இடங்களில் உள்ள மற்ற இந்திய வீரர் விராட் கோலி மட்டும் தான் (10-வது இடம்) . இதற்கிடையில், நியூசிலாந்து வீரர் கிளென் பிலிப்ஸ் டி20 உலகக் கோப்பையில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதை தொடர்ந்து 7வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்

ஐசிசி டி20ஐ பேட்டிங் தரவரிசை (நவம்பர் 2, 2022 நிலவரப்படி)

சூர்யகுமார் யாதவ் - 863 புள்ளிகள்

முகமது ரிஸ்வான் - 842 புள்ளிகள்

டெவோன் கான்வே - 792 புள்ளிகள்

பாபர் ஆசம் - 780 புள்ளிகள்

ஐடன் மார்க்ரம் - 767 புள்ளிகள்

டேவிட் மாலன் - 743 புள்ளிகள்

க்ளென் பிலிப்ஸ் - 703 புள்ளிகள்

ரெய்லி ரூஸோ- 689 புள்ளிகள்

ஆரோன் பின்ச் - 687 புள்ளிகள்

விராட் கோலி - 638 புள்ளிகள்

Tags:    

மேலும் செய்திகள்