பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவராக பொறுப்பேற்ற உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்த ஜக்கா அஷ்ரப் தனது பதவியை கடந்த வாரம் ராஜினாமா செய்தார்.;
கராச்சி,
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் வரையில் அந்த பொறுப்பை உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஷா கவார் ஏற்றுக்கொண்டுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்த ஜக்கா அஷ்ரப் தனது பதவியை கடந்த வாரம் ராஜினாமா செய்தார். இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தேர்தல் ஆணையராக இருக்கும் கவார் புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் வரையில் குறுகிய கால தலைவராக பொறுப்பேற்று கொண்டார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தலை நடத்தும் தனது முதன்மை பொறுப்புடன் கூடுதலாக இதனையும் ஏற்றுக்கொண்டுள்ளார்.