பெண்கள் சேலஞ்ச் டி20 போட்டியில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த சூப்பர்நோவாஸ் அணி!

பெண்கள் சேலஞ்ச் கோப்பை 20 ஓவர் போட்டியில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான சூப்பர்நோவாஸ் அணி அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது.

Update: 2022-05-23 16:59 GMT

புனே,

பெண்கள் ஐ.பி.எல். கிரிக்கெட்டின் முன்னோட்டமாக கருதப்படும் பெண்களுக்கான சேலஞ்ச் கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று முதல் 28-ந்தேதி வரை புனேயில் நடக்கிறது.

இதில் ஸ்மிர்தி மந்தனா தலைமையிலான டிரையல்பிளாசர்ஸ், ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான சூப்பர்நோவாஸ், தீப்தி ஷர்மா தலைமையிலான வெலோசிட்டி ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். இதில் இந்தியர்கள் மட்டுமின்றி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனைகளும் ஆடுகிறார்கள்.

இன்றிரவு 7.30 மணிக்கு தொடங்கிய இன்றைய தொடக்க ஆட்டத்தில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான சூப்பர்நோவாஸ் அணி, ஸ்மிர்தி மந்தனா தலைமையிலான டிரையல்பிளாசர்ஸ் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற ஹர்மன்பிரீத் கவுர் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு தொடக்க வீராங்கனைகள் சிறப்பான தொடக்கம் அமைத்து கொடுத்தனர். ஹர்மன்பிரீத் கவுர் அதிகபட்சமாக 37 ரன்கள் எடுத்தார். ஹர்லீன் டியோல் 35 ரன்கள் எடுத்தார். 12.1 ஓவரில் அணியின் ஸ்கோர் 100 ரன்களை கடந்தது.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில், ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான சூப்பர்நோவாஸ் அணி 163 ரன்கள் குவித்தது. இதன்மூலம், பெண்கள் சேலஞ்ச் கோப்பை 20 ஓவர் போட்டியில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது.

தொடர்ந்து 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டிரையல்பிளாசர்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்