திருப்பூரில் சூப்பர் கிங்ஸ் அகாடமி

சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் சார்பில் தமிழகம் முழுவதும் கிரிக்கெட் அகாடமி தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது.

Update: 2023-08-18 04:42 GMT

கோப்புப்படம்

சென்னை,

சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பில் சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அகாடமி ஏற்கனவே சென்னை, சேலம், ஓசூர், திருச்சி, நெல்லை ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகிறது. தற்போது 6-வது அகாடமியாக திருப்பூரில் யாழி ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்டுடன் இணைந்து தொடங்கப்படுகிறது. திருப்பூர் காங்கேயம் ரோட்டில் உள்ள விஜயபுரத்தில் நிறுவப்படும் சூப்பர் கிங்ஸ் அகாடமியில் 8 பிட்ச், மின்னொளி உள்ளிட்ட அனைத்து விதமான வசதிகளும் அமைக்கப்படுகிறது. டிசம்பர் மாதம் முதல் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு (6 முதல் 23 வயதுக்குட்பட்டோர்) பயிற்சி அளிக்கப்படும். இந்த தகவலை சென்னை சூப்பர் கிங்சின் முதன்மை செயல் அதிகாரி கே.எஸ்.விஸ்வநாதன் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்