சுப்மன் கில் இரட்டை சதம் விளாசல்..! இந்திய அணி 349 ரன்கள் குவிப்பு

தொடர்ந்து 350 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது.

Update: 2023-01-18 12:02 GMT

ஐதராபாத்,

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா-நியூசிலாந்து இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) பகல்-இரவு மோதலாக அரங்கேறுகிறது. இந்த நிலையில் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்கியது. இந்திய அணியின் துவக்க வீரர்கள் சுப்மன் கில், ரோகித் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி நியூசிலாந்து பந்துவீச்சை சிதறடித்தனர்.தொடக்க விக்கெட்டுக்கு  60 ரன்கள் சேர்த்த நிலையில் ரோகித் சர்மா 34ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த விராட் கோலி8 ரன்களும் , இஷான் கிஷன் 5ரன்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மறுபுறம் சுப்மன் கில்     நிலைத்து ஆடி ரன்கள் குவித்தார். தொடர்ந்து ஆடிய சுப்மன் கில் சதம் அடித்து அசத்தினார்.

 மறுமுனையில் சூர்யகுமார் யாதவ் 31ரன்களும் , ஹர்திக் பாண்டியா28  ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். கில் நிலைத்து ஆடி ரன்கள் குவித்தார். சிறப்பாக விளையாடிய சுப்மன் கில் இரட்டைசதம் அடித்து அசத்தினார்.அவர் (19 பவுண்டரி , 9 சிக்ஸர்) 208 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்மூலம் ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த 5வது இந்திய வீரர் என்ற பெருமையை  கில் பெற்றுள்ளார்.

இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 349 ரன்கள் குவித்தது. தொடர்ந்து 350 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்து அணி விளையாடி    வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்