ஹாட்ரிக் சிக்ஸர்கள் பறக்க விட்டு இரட்டை சதத்தை கடந்த சுப்மன் கில்..!
குறிப்பாக பெர்குசன் ஓவரில் தொடர்ந்து 3 சிக்ஸர்கள் பறக்க விட்டு இரட்டை சதத்தை கடந்தார்
ஐதராபாத்,
இந்தியாவுக்கு வருகை தந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா-நியூசிலாந்து இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்றது வருகிறது . இந்த நிலையில் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்கியது. இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 349 ரன்கள் குவித்தது. இந்த போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய சப் சுப்மன் கில் சிறப்பாக ஆடி இரட்டை சதம் அடித்து அசத்தினார். அவர் 149 பந்துகளில் 19 பவுண்டரி , 9 சிக்ஸர்கள் என 208 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
குறிப்பாக பெர்குசன் ஓவரில் தொடர்ந்து 3 சிக்ஸர்கள் பறக்க விட்டு இரட்டை சதத்தை கடந்தார். ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த 5வது இந்திய வீரர் என்ற பெருமையை கில் பெற்றுள்ளார். மேலும்
மேலும் ஒருநாள் போட்டிகளில் மிக இளம் வயதில் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற பெருமையையும் கில் பெற்றுள்ளார்.