இந்தியாவுக்கு எதிரான தொடரில் பங்கேற்க தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி வருகை...!
இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது.;
மும்பை,
இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நாளை (செவ்வாய்கிழமை) இரவு 7 மணிக்கு நடக்கிறது.
இதில் கலந்து கொள்வதற்காக தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி வீரர்கள் கொழும்பில் இருந்து விமானம் மூலம் மும்பை வந்து சேர்ந்தனர். இன்று அவர்கள் பயிற்சியில் ஈடுபடுகிறார்கள்.
20 ஓவர் தொடரில் இந்திய அணியில் விராட் கோலி, ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஆகிய மூத்த வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இந்திய அணி ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா தலைமையில் களம் இறங்குகிறது.