இலங்கை-பாகிஸ்தான் டெஸ்ட்: 3-வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது

பாகிஸ்தான் அணி 38.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 178 ரன்கள் எடுத்துள்ளது.

Update: 2023-07-25 22:53 GMT

Image Courtesy : @TheRealPCB twitter

கொழும்பு,

இலங்கை-பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் ஆடிய இலங்கை அணி 166 ரன்னில் சுருண்டது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி தொடக்க நாளில் 28.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 145 ரன்கள் எடுத்திருந்தது.

2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி 38.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 178 ரன்கள் எடுத்து இருந்த போது பலத்த மழை பெய்ததால் அத்துடன் ஆட்டம் முடித்து கொள்ளப்பட்டது. அப்துல்லா ஷபிக் (87 ரன்), பாபர் அசாம் (28 ரன்) களத்தில் உள்ளனர். தொடர்ந்து 3-வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்