இலங்கை-பாகிஸ்தான் கடைசி டெஸ்ட்: இன்று 4-வது நாள் ஆட்டம்

3-வது நாளான நேற்று பாகிஸ்தான் அணி 88.1 ஓவர்களில் 231 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது.

Update: 2022-07-26 22:30 GMT

காலே,

பாகிஸ்தான்-இலங்கை அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலேயில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இலங்கை முதல் இன்னிங்சில் 378 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி 2-வது நாள் முடிவில் 7 விக்கெட்டுக்கு 191 ரன்கள் எடுத்து இருந்தது. 3-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி 88.1 ஓவர்களில் 231 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இலங்கை அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் ரமேஷ் மென்டிஸ் 5 விக்கெட்டும், பிரபாத் ஜெயசூர்யா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 147 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி நேற்றைய முடிவில் 50 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 176 ரன்கள் எடுத்து இருந்தது. கேப்டன் திமுத் கருணாரத்னே 27 ரன்னுடனும், தனஞ்செயா டி சில்வா 30 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இலங்கை அணி இதுவரை 323 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெறும்.

Tags:    

மேலும் செய்திகள்