"நோ-பால் வீசுவது குற்றம்" அர்ஷ்தீப் சிங்கின் ஐந்து நோ-பால்கள் குறித்து ஹர்திக் பாண்ட்யா

20 ஓவர் உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக முக்கிய விக்கெட்டுகளை எடுத்து அசத்திய அவர், கடைசி கட்ட ஓவர்களையும் அற்புதமாக வீசும் திறம் பெற்று வந்தார்.

Update: 2023-01-06 07:03 GMT

புனே

இந்தியா- இலங்கை அணிகளுக்கிடையிலான 2வது 20 ஓவர் போட்டி புனேவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதில் முதல் போட்டியில் பங்கேற்காத அர்ஷ்தீப் சிங், இந்த போட்டியில் பிளேயிங் லெவனில் இடம்பெற்றார்.

20 ஓவர் உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக முக்கிய விக்கெட்டுகளை எடுத்து அசத்திய அவர், கடைசி கட்ட ஓவர்களையும் அற்புதமாக வீசும் திறம் பெற்று வந்தார்.இதனால் இந்திய 20 ஓவர் அணிக்கு முக்கிய பந்துவீச்சாளராக திகழ்வார் என அனைவராலும் பேசப்பட்டு வந்தார்.

பந்துவீச்சில் பல்வேறு திறமைகளை கொண்ட அவர், இலங்கைக்கு எதிரான இந்த 20 ஓவர் போட்டியில் செய்ததோ வேறு. இலங்கைக்கு எதிரான போட்டியின் இரண்டாவது ஓவரை வீச வந்த அவர், ஒரே ஓவரில் 3 நோ பால்களை வீசினார். அத்துடன் அந்த ஓவரில் மட்டும் 19 ரன்களை வழங்கினார். இதனால், அவர் மீது நம்பிக்கை இழந்தது போல் காணப்பட்ட கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, அவருக்கு மீதமுள்ள 4 ஓவர்களையும் வீசுவதற்கு வாய்ப்பு வழங்கவில்லை.

இறுதியில் 19வது ஓவரை வீச வந்த அர்ஷ்தீப் சிங், அந்த ஓவரிலும், 2 நோ பால்களை வீசினார். அத்துடன், 18 ரன்களையும் வாரி வழங்கினார். இரண்டே ஓவர்களை வீசி 5 நோ பால்களுடன் 37 ரன்களை வாரி வழங்கிய அர்ஷ்தீப் சிங்கை பல்வேறு தரப்பினர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த இந்திய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, எந்த வடிவத்திலும் நோ-பால் வீசுவது குற்றம் என்பது எங்களுக்குத் தெரியும் இருந்தாலும் 5 நோ-பால் வீசிய அர்ஷ்தீப் சிங்கைக் குறை கூறவில்லை என்றும் கூறினார்.

மேலும் அவர் கூறும் போது அர்ஷ்தீப்புக்கு அந்த சூழ்நிலை இது மிகவும் கடினமானது. அவரைக் குறை கூறக்கூடாது ஆனால் எந்த வடிவத்திலும் நோ-பால் செய்வது ஒரு குற்றம் என்று எங்களுக்குத் தெரியும், "என்று ஹர்திக் பாண்டியா கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்