உலகக்கோப்பை தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு...!!

உலகக்கோப்பை தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-09-05 11:00 GMT

image courtesty; ICC

கேப்டவுண்,

இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. அக்டோபர் 5ம் தேதி நடைபெற உள்ள தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்தும், நியூசிலாந்தும் அகமதாபாத்தில் மோத உள்ளன.

இதில் தென் ஆப்பிரிக்க அணி தனது முதல் ஆட்டத்தில் அக்டோபர் 7ஆம் தேதி இலங்கை அணியுடன் மோத உள்ளது. இந்நிலையில் உலகக்கோப்பை தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட தென் ஆப்பிரிக்க அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. டெம்பா பவுமா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

உலகக்கோப்பை தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி பின்வருமாறு;-

டெம்பா பவுமா (கேப்டன்), ஜெரால்ட் கோட்ஸி, குயின்டன் டி காக், ரீசா ஹென்ட்ரிக்ஸ், மார்கோ ஜான்சன், ஹென்ரிச் கிளாசென், சிசண்டா மாகலா, கேசவ் மகராஜ், ஐடன் மார்க்ராம், டேவிட் மில்லர், லுங்கி என்கிடி, அன்ரிச் நார்ட்ஜே, ககிசோ ரபாடா, டப்ரைஸ் ஷாம்வான்சி மற்றும் ரஸ்ஸி வான்டெர் துசென்.

Tags:    

மேலும் செய்திகள்