சர்வதேச டெஸ்ட் போட்டியில் சர்பராஸ் கான் அறிமுகம்...ஆனந்த கண்ணீர் விட்ட தந்தை

இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Update: 2024-02-15 06:00 GMT

ராஜ்கோட்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தியா- இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று தொடங்கியது . இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

இந்த நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியில் அறிமுக வீரராக சர்பராஸ் கான் சேர்க்கப்பட்டார். இதனால் சர்வதேச டெஸ்ட் போட்டியில் சர்பராஸ் கான் அறிமுகமானார்.

அவருக்கு இந்திய டெஸ்ட் அணியின் தொப்பியை முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே வழங்கினார். சர்பராஸ் கான் இந்திய அணியின் தொப்பியை பெற்றுக் கொண்டதும் அவரது தந்தை கட்டிப்பிடித்து ஆனந்த கண்ணீர் வடித்தார்.அதேபோல் சர்பராஸ் கான் மனைவியும் ஆனந்த கண்ணீர் வடித்தார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்