சாம்சன் - கெய்க்வாட் அதிரடி; இந்தியா 185 ரன்கள் குவிப்பு...!

இந்திய அணி தரப்பில் கெய்க்வாட் 58 ரன், சாம்சன் 40 ரன் எடுத்தனர்.;

Update:2023-08-20 21:11 IST

Image Courtesy: @BCCI

டப்ளின்,

ஜஸ்பிரித் பும்ரா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் டப்ளினில் நேற்று முன்தினம் இரவு நடந்த மழையால் பாதிக்கப்பட்ட முதலாவது போட்டியில் டக்வொர்த் லீவிஸ் விதிமுறைப்படி இந்திய அணி 2 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2வது டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் களம் இறங்கினர். இதில் ஜெய்ஸ்வால் 18 ரன்னிலும், அடுத்து களம் இறங்கிய திலக் வர்மா 1 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து சஞ்சு சாம்சன் கெய்க்வாட்டுடன் ஜோடி சேர்ந்தார்.

இந்த இணை அதிரடியில் மிரட்டி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியது. அதிரடியாக ஆடிய சாம்சன் 26 பந்தில் 40 ரன்னும், கெய்க்வாட் 43 பந்தில் 58 ரன்னும் எடுத்து அவுட் ஆகினர். இதையடுத்து ரிங்கு சிங், ஷிவம் துபே ஜோடி சேர்ந்தனர்.

இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்தது. இந்தியா தரப்பில் கெய்க்வாட் 58 ரன், சாம்சன் 40 ரன், ரிங்கு சிங் 38 ரன், ஷிவம் துபே 22 ரன் எடுத்தனர். இதையடுத்து 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி ஆட உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்