பாகிஸ்தான் அணிக்காக விளையாடிய சச்சின் தெண்டுல்கர்...! எங்கு ...எப்போது... எப்படி...?
பாகிஸ்தானின் கேப்டனாக இருந்த இம்ரான் கானுக்குக் கூட, சொந்த அணியில் விளையாடிய அந்த மும்பைக்காரரைப் பற்றி அதிகம் தெரியாது.
மும்பை
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் புகழ்பெற்ற பலருடன் விளையாடி உள்ளார்.
சச்சினால் இந்திய கிரிக்கெட் அணிக்கு பெருமை. சச்சின் பாகிஸ்தான் அணிக்காக விளையாடி உள்ளார் என்றால் யாருக்காவது நம்ப முடியுமா...?ஆனால் உண்மை. 1987ல் பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு வருகை தந்தது. இந்த சந்தர்ப்பத்தில் ஒரு கண்காட்சி போட்டி நடத்தப்பட்டது. அப்போது ஒரு பாகிஸ்தான் வீரர் காயத்துடன் வெளியே செல்ல நேர்ந்தது, அப்போது நமது சச்சின் பாகிஸ்தானுக்காக மாற்று பீல்டராக விளையாடினார்.
அப்போது பாகிஸ்தானின் கேப்டனாக இருந்த இம்ரான் கானுக்குக் கூட, சொந்த அணியில் விளையாடிய அந்த மும்பைக்காரரைப் பற்றி அதிகம் தெரியாது.
சச்சின் தனது சுயசரிதையான பிளேயிங் இட் மை வேயில் இதுகுறித்து கூறி உள்ளார். ஜாவேத் மியான்டட் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் அப்துல் காதர் ஆகியோர் மதிய உணவுக்கு சென்றபோது, அதற்கு பதிலாக சச்சினை பீல்டிங் செய்ய இம்ரான் கான் அனுமதித்தார். தான் தான் அந்த பீல்டர் என்பது இம்ரானுக்கு கூட நினைவில் இல்லை என கூறி உள்ளார் சச்சின்