தொடர் தோல்விகளால் உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறிய நடப்பு சாம்பியன்: ஜாஸ் பட்லர் வேதனை

நடப்பு உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி 7 ஆட்டங்களில் விளையாடி ஒன்றில் மட்டும் வெற்றிபெற்ற நிலையில் 6 போட்டிகளில் தோல்வியை சந்தித்தது.

Update: 2023-11-05 06:50 GMT

பெங்களூரு,

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. லீக் ஆட்டங்கள் இறுதிகட்டத்தை நோக்கி நகர்ந்துவரும் நிலையில், இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளன. ஆஸ்திரேலிய அணியும் கிட்டத்தட்ட அரையிறுதியை உறுதிசெய்துவிட்டது.

கடைசி ஒரு இடத்திற்கு நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையே ஆட்டம் நிலவுகிறது. இந்த சூழலில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி, யாரும் எதிர்பாராத வகையில் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.

கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்பட்ட இங்கிலாந்து அணியில் அதிரடி பேட்ஸ்மேன்கள் இருந்தும், அவர்கள் நடப்பு உலகக்கோப்பை தொடரில் தங்களது திறமையை வெளிக்காட்டவில்லை. பந்துவீச்சும் சொல்லும்படி இல்லை. இதனால் அந்த அணி 7 ஆட்டங்களில் விளையாடி ஒன்றில் மட்டும் வெற்றிபெற்ற நிலையில் 6 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்தது.

இதன் காரணமாக அந்த அணி அரையிறுதிக்கு தகுதிபெறமுடியாமல் வெளியேறியது. உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியின் செயல்பாடுகள் குறித்து அந்த அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் கூறியதாவது;

"இந்த தொடர் தோல்விகள் எங்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது. பெரும் நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இந்தியாவுக்கு வந்தோம். ஆனால் அதற்காக எந்த நியாயத்தையும் ஒரு அணியாக நாங்கள் செய்யவில்லை. நான் சிறப்பாக ஆடாததால் அணியும் பின்னுக்கு சென்றுவிட்டது. சிறப்பாக பயிற்சி செய்து அடுத்த ஆட்டத்தில் நன்றாக ஆடவேண்டும்." இவ்வாறு அவர் கூறினார்.  

Tags:    

மேலும் செய்திகள்