பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியிலிருந்து ரமீஸ் ராஜா அதிரடி நீக்கம்

புதிய தலைவராக நஜாம் சேத்தி நியமினம் செய்யப்பட்டுள்ளார்.;

Update:2022-12-22 15:02 IST

கராச்சி,

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவராக கடந்த ஆண்டு செப்டம்பரில் ரமீஸ் ராஜா நியமிக்கப்பட்டார். பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து, பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை 3-0 என கைப்பற்றியது. இதனால் பாகிஸ்தான் நிர்வாகம் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

இந்நிலையில், இங்கிலாந்து அணியிடம் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியிலிருந்து ரமீஸ் ராஜா நீக்கப்பட்டுள்ளார். புதிய தலைவராக நஜாம் சேத்தி நியமினம் செய்யப்பட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்