டி20 உலகக்கோப்பை வரலாற்றில் கிறிஸ் கெய்லின் மாபெரும் சாதனையை தகர்த்த பூரன்

டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் நிக்கோலஸ் பூரன் 3 சிக்சர்கள் அடித்தார்.

Update: 2024-06-22 04:50 GMT

image courtesy:PTI

பார்படாஸ்,

டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் - அமெரிக்கா அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த அமெரிக்கா 128 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, ஷாய் ஹோப் மற்றும் நிக்கோலஸ் பூரனின் அதிரடி ஆட்டத்தால் 10.5 ஓவர்களிலேயே இலக்கை கடந்து வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் 12 பந்துகளை எதிர்கொண்ட பூரன் 3 சிக்சர்கள் உட்பட 27 ரன்கள் குவித்தார். இந்த ஆட்டத்தில் அவர் அடித்த 3 சிக்சர்களையும் சேர்த்து நடப்பு சீசனில் பூரன் அடித்துள்ள சிக்சர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.

இதன் மூலம் டி20 உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு சீசனில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற கிறிஸ் கெய்லின் மாபெரும் சாதனையை தகர்த்துள்ள பூரன் புதிய சாதனையை படைத்துள்ளார்.

அந்த பட்டியல்:

1. நிக்கோலஸ் பூரன் - 17 சிக்சர்கள்

2. கிறிஸ் கெய்ல் - 16 சிக்சர்கள்

3. சாமுவேல்ஸ்/ வாட்சன் - 15 சிக்சர்கள் 

Tags:    

மேலும் செய்திகள்