இந்தியாவுக்கு எதிராக அரை இறுதியில் விளையாடுவது மிகப்பெரிய சவாலாக இருக்கும் - கேன் வில்லியம்சன்

உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி பெற்றது.

Update: 2023-11-10 01:34 GMT

பெங்களூரு,

உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை - நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் இலங்கை நிர்ணயித்த 172 ரன் இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து 23.2 ஓவர்களில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 172 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்தி கொண்டது. நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறினால் இந்திய அணியை எதிர்கொள்ள வேண்டும். இந்நிலையில் இந்தியாவுக்கு எதிராக அரை இறுதியில் விளையாடுவது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் கூறியுள்ளார்.

இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்ற பின்னர் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் அளித்த பேட்டியில் கூறியதாவது,

சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தினோம். முதல் சுற்றில் சில அணிகள் ஒரே புள்ளிகளில் முடிக்க வாய்ப்பு உள்ளது. அடுத்த இரண்டு நாட்கள் நாங்கள் என்ன செய்யப் போகிறோம் என தெரியவில்லை.

அனைத்தும் எங்களுக்கு சாதகமாக அமைந்தால் அரை இறுதிப்போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெறுவோம். இந்தியாவுக்கு எதிராக அரை இறுதியில் விளையாடுவது மிகப்பெரிய சவாலாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்