ஒருநாள் உலகக்கோப்பை தொடர்: 18 வீரர்கள் கொண்ட முதற்கட்ட அணியை அறிவித்த ஆஸ்திரேலியா...!

ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான 18 வீரர்கள் கொண்ட முதற்கட்ட அணியை ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.

Update: 2023-08-07 09:23 GMT

Image Courtesy: AFP

மெல்போர்ன்,

இந்தியாவில் வரும் அக்டோபர் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் போட்டியை நடத்தும் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து உள்ளிட்ட 10 அணிகள் விளையாட உள்ளன.

இந்த நிலையில் இந்த உலகக்கோப்பை தொடருக்கான 18 வீரர்கள் கொண்ட முதற்கட்ட அணியை ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. ஐசிசி உத்தரவின்படி செப்டம்பர் 28-ம் தேதிக்கு முன்னதாக இந்த அணி 15 வீரர்கள் என்ற அளவில் குறைக்கப்படும். இந்த ஆஸ்திரேலிய அணியில் மார்னஸ் லபுசாக்னே, டிம் டேவிட் ஆகியோருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

உலகக்கோப்பை தொடருக்கான 18 வீரர்கள் கொண்ட முதற்கட்ட ஆஸ்திரேலிய அணி:

பேட் கம்மின்ஸ் (கேப்டன்), சீன் அப்போட், ஆஸ்டன் அகர், அலெக்ஸ் கேரி, நாதன் எல்லிஸ், கேமரூன் கிரீன், ஆரோன் ஹார்டி, ஜோஷ் ஹேசில்வுட் , டிராவிஸ் ஹெட், ஜோஸ் இங்லிஸ், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், தன்வீர் சங்கா, ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோனிஸ், டேவிட் வார்னர், ஆடம் ஜம்பா.

உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணி செப்டம்பர் மாதம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 5 ஒருநாள் போட்டிகளிலும், இந்தியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் ஆட உள்ளது. அந்த இரு தொடர்களிலும் இந்த 18 பேர் கொண்ட அணியே விளையாடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலியா 5 ஒருநாள் போட்டிகள் மட்டுமின்றி, 3 டி20 போட்டிகளிலும் ஆடுகிறது. அந்த டி20 தொடருக்கான அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணிக்கு மிட்செல் மார்ஷ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 அணி விவரம்:

மிட்செல் மார்ஷ், சீன் அப்போட், ஜேசன் பெஹ்ரென்டார்ப், டிம் டேவிட், நாதன் எல்லிஸ், ஆரோன் ஹார்டி, டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், ஸ்பென்சர் ஜான்சன், கிளென் மேக்ஸ்வெல், மேட் ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஆடம் ஜாம்பா.

Tags:    

மேலும் செய்திகள்