வங்கதேசக்கு எதிரான ஒருநாள் தொடர்: முகமது ஷமிக்கு பதிலாக உம்ரான் மாலிக் சேர்ப்பு

வங்கதேசக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து காயம் காரணமாக முகமது ஷமி விலகி உள்ளார்.

Update: 2022-12-03 06:50 GMT

Image Courtesy: AFP 

மிர்பூர்,

இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுவதற்காக வங்காளதேசம் சென்றுள்ளது. இந்தியா -வங்காளதேச அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. நியூசிலாந்து தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்ட கேப்டன் ரோகித் சர்மா , முன்னாள் கேப்டன் விராட் கோலி , லோகேஷ் ராகுல் ஆகியோர் அணிக்கு திரும்பி உள்ளனர்.

இஷான் கிஷன், முகமது சிராஜ், ரஜத் படிதார், ராகுல் திரிபாதி , குல்தீப் சென் உள்ளிட்டோரும் இந்த தொடரில் ஆடுகிறார்கள். நியூசிலாந்து தொடரில் ஆடிய சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன், சாஹல் உள்ளிட்டோர் வங்காளதேச தொடரில் இடம் பெறவில்லை.

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் வங்காளதேச அணி அதன் சொந்த மண்ணில் சிறப்பாக விளையாடக்கூடியது. இந்திய அணி கடைசியாக 2015 ஆண்டு அந்த நாட்டில் ஆடிய போது 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்து இருந்தது.

இதனால் இந்திய வீரர்கள் மிகவும் கவனத்துடனும் , திறமையுடனும் விளையாட வேண்டும். இந்நிலையில், வேகப்பந்து வீரர் முகமது ஷமி இந்த தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவர் கையில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியுள்ளார்.

இந்நிலையில், காயம் அடைந்த முகமது ஷமிக்கு பதிலாக இந்திய வேகப்பந்து வீச்சு புயல் உம்ரான் மாலிக் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்