ஒரு நாள் கிரிக்கெட்: நியூசிலாந்தை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்

வெஸ்ட்இண்டீஸ் அணி 39 ஓவர்களில் 193 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Update: 2022-08-18 22:12 GMT

Image Courtesy : @ICC twitter

பிரிட்ஜ்டவுன்,

வெஸ்ட்இண்டீஸ் - நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பிரிட்ஜ்டவுனில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 45.2 ஓவர்களில் 190 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக கேப்டன் கேன் வில்லியம்சன் 34 ரன்னும், மிச்செல் பிரேஸ்வெல் 31 ரன்னும் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அகில் ஹூசைன், அல்ஜாரி ஜோசப் தலா 3 விக்கெட்டும், ஜாசன் ஹோல்டர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

தொடர்ந்து ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணி 39 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஷமார் புரூக்ஸ் 79 ரன்கள் விளாசினார். ஒருநாள் போட்டியில் தொடர்ந்து 9 தோல்விகளை சந்தித்த வெஸ்ட்இண்டீஸ் அணி அதன் பிறகு பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.

இந்த வெற்றியின் மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் வெஸ்ட்இண்டீஸ் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இதே மைதானத்தில் இன்று இரவு நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்