சுப்மன் கில் அல்ல...குஜராத் அணியின் 'துருப்பு சீட்டு' இவர் தான் - சேவாக் கூறும் வீரர்...!

ஐபிஎல் தொடரில் முதலாவது தகுதி சுற்றில் இன்று சென்னை-குஜராத் அணிகள் மோத உள்ளன.

Update: 2023-05-23 06:20 GMT

Image Courtesy: AFP/ TWITTER 

மும்பை,

ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் இன்று சென்னையில் தொடங்குகின்றன. இன்று நடைபெறும் முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹர்த்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன.

சென்னை அணியில் பேட்டிங் வரிசை மிகப்பலமாக உள்ளது. அதே வேளையில் பந்துவீச்சில் சீனியர் வீரர்கள் இல்லாதது சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதே வேளையில் பேட்டிங், பந்துவீச்சு என அனைத்து பகுதிகளிலும் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் குஜராத் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முனைப்பில் உள்ளது.

குஜராத் அணியின் வெற்றிக்கு மிக முக்கியமாக கருதப்படுவர் சுப்மன் கில். தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சுப்மன் கில் 14 இன்னிங்சில் 680 ரன்கள் குவித்துள்ளார். அனைத்து ரசிகர்களையும் கவர்ந்துள்ள சுப்மன் கில் குஜராத் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகவும், துருப்பு சீட்டாகவும் பார்க்கப்படும் நிலையில் குஜராத் அணியின் துருப்பு சீட்டு ரஷித் கான் தான் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது,

குஜராத் அணிக்கு ரஷித் கான் தான் துருப்புச்சீட்டு. குஜராத் அணிக்கு விக்கெட் வீழ்த்த வேண்டும் என்றால் ரஷித் கானை தான் அழைத்து வருகிறார்கள். ஹர்த்திக் பாண்ட்யா ரஷித் கானை பயன்படுத்தும் விதம் பாராட்டுக்குரியது. ரஷித் கான் பார்ட்னர்ஷிப்புகளை முறியடிக்க விரும்புகிறார்.

அவரது சிறப்பான ஆட்டத்தின் மூலம் தற்போது இந்த சீசனின் வெற்றிகரமான பந்துவீச்சாளராக மாறியுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்