ரோகித், தோனி இல்லை... அவர்தான் எனது ரோல் மாடல் - ரியான் பராக்

உள்ளூர் கிரிக்கெட்டில் ஒவ்வொரு வருடமும் தாம் 350 ஓவர்கள் வீசுவதாக ரியான் பராக் கூறியுள்ளார்

Update: 2024-09-06 12:27 GMT

image courtesy: AFP

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் ரியான் பராக். ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியதன் மூலம் இந்திய அணிக்காக அறிமுகம் ஆனார். அறிமுகம் ஆன தொடர்களிலேயே சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய அவர் இந்திய அணியில் தனக்கான இடத்தை பிடித்துவிட்டார்.

குறிப்பாக இலங்கை தொடரில் டி20 போட்டியிலேயே முக்கிய நேரத்தில் பந்து வீசி வெற்றியில் பங்காற்றினார். வெறும் 5 ரன்கள் மட்டும் கொடுத்த அவர் 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.

இந்நிலையில் விராட் கோலி தமது ரோல் மாடல் என்று தெரிவிக்கும் ரியான் பராக் உள்ளூர் கிரிக்கெட்டில் ஒவ்வொரு வருடமும் 350 ஓவர்கள் வீசுவதாக கூறியுள்ளார். அதனாலேயே சர்வதேச கிரிக்கெட்டிலும் தம்மால் பந்து வீச்சில் அசத்த முடிவதாக அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும் அது ஒளிபரப்படாததால் தம்முடைய பவுலிங் திறமை பற்றி யாருக்கும் தெரிவதில்லை என்றும் ரியான் பராக் கூறியுள்ளார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு:- "விராட் கோலி எனது ரோல் மாடல். அவரை நான் எப்போதும் பார்க்கிறேன். விராட் பையாவுடன் உடைமாற்றும் அறையை பகிர்ந்து கொண்டது நம்ப முடியாத கனவு நிஜமான தருணமாகும். அனைவரும் நான் எனது பந்து வீச்சில் ஸ்பெஷலாக வேலை செய்துள்ளதாக நினைக்கின்றனர்.

ஆனால் நான் உள்ளூர் கிரிக்கெட்டில் விக்கெட்டுகளை எடுத்துள்ளேன். அங்கே ஒவ்வொரு சீசனிலும் சுமார் 350 ஓவர்கள் வீசுகிறேன். இருப்பினும் அது ஒளிபரப்பப்படாததால் யாருக்கும் தெரியாது. நீண்ட காலமாக நான் பந்து வீசி வருகிறேன். தற்போது இந்தியாவுக்காகவும் ஐபிஎல் தொடரிலும் அதை செய்யும்போது எனது பவுலிங் காட்சிப்படுத்தப்படுகிறது. அதை தவிர்த்து நான் எக்ஸ்ட்ராவாக எதுவும் செய்யவில்லை" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்