தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகும் நியூசிலாந்து முன்னணி வீரர்

நியூசிலாந்து - தென் ஆப்பிரிக்கா இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 13-ம் தேதி நடைபெற உள்ளது.

Update: 2024-02-08 10:02 GMT

image courtesy; twitter/@ICC

வெலிங்டன்,

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 4-ம் தேதி தொடங்கியது. 4 நாட்கள் மட்டுமே நடைபெற்ற இந்த போட்டியில் நியூசிலாந்து 281 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 13-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்த தொடருக்கான நியூசிலாந்து அணியில் இடம்பெற்றிருந்த முன்னணி வீரரான டேரில் மிட்செல் காயம் காரணமாக 2-வது போட்டியிலிருந்து விலகியுள்ளார். காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை மேற்கொள்ள உள்ளதால் அவர் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக வில் ஓ ரூர்க் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மேலும் வரும் 21-ம் தேதி சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற உள்ள 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலிருந்தும் அவர் விலகியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்