இந்திய கிரிக்கெட் அணிக்கான புதிய ஜெர்சி வெளியீடு

டி20 , ஒருநாள் போட்டி , டெஸ்ட் போட்டி என இந்திய அணியின் 3 புதிய ஜெர்சி வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2023-06-01 13:26 GMT

மும்பை,

இந்திய அணியின் கிட் ஸ்பான்சராக 2016-ல் இருந்து 2020 வரை நைக் நிறுவனம் இருந்தது. அதைத்தொடர்ந்து 2020-ல் இருந்து இந்திய கிரிக்கெட் அணியின் கிட் ஸ்பான்சராக இருந்துவந்த எம்பிஎல் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் ஒப்பந்தம் முடிந்தது.

இந்திய அணியின் மெயின் ஸ்பான்சராக பைஜூஸ்நிறுவனம் இருந்து வருகிறது. இந்நிலையில், புதிய கிட் ஸ்பான்சராக அடிடாஸ் நிறுவனத்துடன் பிசிசிஐ ஒப்பந்தம் செய்துள்ளது. 

இந்த நிலையில் அடிடாஸ் நிறுவனம் தயாரித்த இந்திய அணியின் புதிய ஜெர்சி வெளியிடப்பட்டுள்ளது. டி20 , ஒருநாள் போட்டி , டெஸ்ட் போட்டி என இந்திய அணியின் 3 புதிய ஜெர்சி வெளியிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்