பாபர் அசாம் விலகிய நிலையில் பாகிஸ்தான் அணிக்கு புதிய கேப்டன்கள்..!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் அனைத்து வகை கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகுவதாக பாபர் அசாம் நேற்று அறிவித்தார்.

Update: 2023-11-16 05:47 GMT

லாகூர்,

10 அணிகள் பங்கேற்ற 13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடித்த இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் உள்பட 6 அணிகள் வெளியேறின.

லீக் சுற்றுடன் பாகிஸ்தான் அணி நடையை கட்டியது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. பாகிஸ்தான் அணியின் செயல்பாட்டை பல்வேறு தரப்பினரும் குறை கூறினர். இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் ஒருநாள், டெஸ்ட், டி-20 ஆகிய 3 வடிவிலான கிரிக்கெட் போட்டிகளின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக பாபர் அசாம் நேற்று அறிவித்தார்.

பாபர் அசாம் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய நிலையில் பாகிஸ்தான் அணிக்கு புதிய கேப்டன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி டெஸ்ட் அணிக்கு ஷான் மசூத்தும், டி20 அணிக்கு ஷாஹின் அப்ரிடியும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன் இன்னும் அறிவிக்கப்படவில்லை.


Tags:    

மேலும் செய்திகள்