சிக்சரை தடுத்து ரன்-அவுட்டாக மாற்றிய நேபாள கிரிக்கெட் வீரர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ

நேபாள கிரிக்கெட் அணி 15.2 ஓவர்களில் வெற்றி இலக்கான 121 ரன்களை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Update: 2024-03-04 05:58 GMT

காத்மாண்டு:

நேபாளத்தில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது ஆட்டத்தில் நேபாளம்- நெதர்லாந்து அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் ஆடிய நெதர்லாந்து அணி 120 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய நேபாளம் 15.2 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் முதலில் நெதர்லாந்து அணி ஆடியபோது, கடைசி ஓவரில் சிக்சருக்கு சென்ற பந்தை நேபாள வீரர் குஷால் புர்டெல் அபாரமாக தடுத்து, பேட்ஸ்மேனை ரன் அவுட் ஆக்கினார். அதாவது, அந்த ஓவரின் 3வது பந்தை எதிர்கொண்ட மெர்வ்,  தூக்கி அடித்தார். அது சிக்சர் என்றே அனைவரும் கருதினர். ஆனால், பவுண்டரி லைனில் மின்னல் வேகத்தில் பாய்ந்து பந்தை தடுத்த குஷால் புர்டெல், உள்ளே விழுந்த பந்தை மீண்டும் எடுத்து விக்கெட் கீப்பரை நோக்கி வீசினார்.

அதற்குள் முதல் ரன் எடுத்த மெர்வ், இரண்டாவது ரன் எடுக்க முயற்சிக்கவில்லை. மறுமுனையில் விவான் கிங்மா  இரண்டாவது ரன் எடுக்க ஓடி வந்தார். இதனால் அவரை கீப்பர் ரன் அவுட் செய்தார்.

இந்த விறுவிறுப்பான ரன் அவுட் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. குஷால் புர்டெல்லின் முயற்சியை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்