234 ரன்கள் அடித்தும் ஒரு வீரர் கூட அரைசதம் இல்லை: புதிய சாதனை படைத்த மும்பை இந்தியன்ஸ்

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லிக்கு எதிராக மும்பை அணி 234 ரன்கள் குவித்தது.

Update: 2024-04-08 11:16 GMT

image courtesy: twitter/ @mipaltan

மும்பை,

10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் மும்பை இந்தியன்சும், டெல்லி கேப்பிடல்சும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 234 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 49 ரன்கள் அடித்தார். பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி 205 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வியை தழுவியது.

இந்த போட்டியில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி டி20 கிரிக்கெட் வரலாற்றில் மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தி அசத்தியுள்ளது. அந்த வகையில் மும்பை அணி இந்த போட்டியின் மூலம் படைத்த சாதனை யாதெனில் : டி20 வரலாற்றில் ஒரு வீரர் கூட அரைசதம் அடிக்காமல் ஒரு இன்னிங்சில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களை பதிவு செய்த அணிகளின் பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் தற்போது முதலிடத்தை பிடித்துள்ளது.

இதற்கு முன்னதாக சோமர்செட் - கென்ட் அணிகளுக்கு இடையேயான போட்டியின்போது சோமர்செட் அணியில் ஒரு வீரர் கூட அரைசதம் அடிக்காமல் 226 ரன்கள் அடித்ததே அதிகபட்ச ரன்களாக இருந்தது. தற்போது அந்த சாதனையை முறியடித்த மும்பை இந்தியன்ஸ் புதிய சாதனையை படைத்துள்ளது.

அந்த பட்டியல்:-

1. மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் - 234 ரன்கள்

2. சோமர்செட் - கெண்ட் - 226 ரன்கள்

3. அயர்லாந்து - நேபாளம் ஏ - 222 ரன்கள்

4. ஆஸ்திரேலியா - இங்கிலாந்து - 221 ரன்கள் 

Tags:    

மேலும் செய்திகள்