டெஸ்டில் அதிக சிக்சர்: மெக்கல்லத்தின் சாதனையை சமன் செய்தார் ஸ்டோக்ஸ்

நியூசிலாந்து முன்னாள் கேப்டன் பிரன்டன் மெக்கல்லத்தின் சாதனையை பென் ஸ்டோக்ஸ் சமன் செய்தார்.

Update: 2022-12-11 23:32 GMT

Image Courtesy : ANI

முல்தான்,

இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி முல்தானில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 281 ரன்களும், பாகிஸ்தான் 202 ரன்களும் எடுத்தன. 3-வது நாளான நேற்று இங்கிலாந்து அணி 64.5 ஓவர்களில் 275 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

இதில் இங்கிலாந்து கேப்டனும், ஆல்-ரவுண்டருமான பென் ஸ்டோக்ஸ் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 41 ரன்கள் எடுத்தார். இந்த சிக்சரையும் டெஸ்டில் அவரது ஒட்டுமொத்த சிக்சர் எண்ணிக்கை 107 ஆக (88 போட்டி) உயர்ந்தது.

இதன் மூலம் டெஸ்டில் அதிக சிக்சர் அடித்தவரான நியூசிலாந்து முன்னாள் கேப்டன் பிரன்டன் மெக்கல்லத்தின் சாதனையை (101 டெஸ்டில் 107 சிக்சர்) சமன் செய்தார். அனேகமாக அடுத்த டெஸ்டில் இச்சாதனையை முறியடித்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வரிசையில் 3-வது இடத்தில் ஆஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட் (100 சிக்சர்) உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்