ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகும் மொசின் நக்வி? - வெளியான தகவல்

ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் புதிய தலைவராக பாகிஸ்தானின் மொசின் நக்வி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2024-07-31 04:27 GMT

Image Grab On Video Posted By @TheRealPCB

கராச்சி,

ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ஏ.சி.சி) தலைவராக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷா (பி.சி.சி.ஐ) செயல்பட்டு வருகிறார். அவரின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவுக்கு வருகிறது.

இதையடுத்து ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ஏ.சி.சி) புதிய தலைவராக, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் சேர்மன் (பி.சி.பி) மொசின் நக்வி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ஏ.சி.சி) தலைவராக உள்ள ஜெய் ஷாவின் பதவிக்காலம் முடிந்த பின்னர் பாகிஸ்தானின் மொசின் நக்வி புதிய தலைவராக பதவியேற்க உள்ளதாகவும், சமீபத்தில் நடந்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாகவும், அடுத்து நடைபெற உள்ள ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்