காணாமல் போன கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவின் தந்தை பத்திரமாக மீட்பு

அவரது உடல்நிலை நன்றாக உள்ளது, அவர் மீண்டும் குடும்பத்துடன் இணைந்துள்ளார் என்று அதிகாரி கூறினார்.;

Update:2023-03-28 14:30 IST

லக்னோ,

இந்திய கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவ், இவரது தந்தை மஹாதேவ் ஜாதவ் 75, இன்று காலை புனே நகரில் கோத்ரூட் என்ற பகுதியிலிருந்த போது வெளியே சென்றவர். வீடு திரும்பவில்லை. திடீரென காணமானல் போனதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கேதர் ஜாதவ் குடும்பத்தினர் அவரை வெளியே தேடிச் சென்றுள்ளனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையடுத்து பீதியடைந்த அவர்கள் மஹாதேவ் ஜாதவ் காணமானல் போனது குறித்து லக்னோவில் அலங்கார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் உடனடியாக மஹாதேவ் ஜாதவை தேடத் தொடங்கினர். போலீசார் தேடிய நிலையில் சில மணி நேரத்தில் அவர் பத்திரமாக கண்டுபிடிக்கப்பட்டார்.

மகாதேவ் ஜாதவ் முந்த்வா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல் நிலைய அதிகாரி அஜித் லக்டே தெரிவித்தார். அவரது உடல்நிலை நன்றாக உள்ளது, அவர் மீண்டும் குடும்பத்துடன் இணைந்துள்ளார் என்று அதிகாரி மேலும் கூறினார்.

இதனை தொடர்ந்து கேதார் ஜாதவ் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ,

பிரார்த்தனைகளுக்கு செய்த அனைவருக்கும் நன்றி'. எப்போதும் நன்றியுடன் இருப்பேன். என பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்