பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம்; சிறந்த பீல்டர் விருதை வென்ற ரிஷப் பண்ட்

20 அணிகள் கலந்து கொண்டுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது.;

Update:2024-06-10 13:08 IST

Image Crab On Video Posted By @BCCI

நியூயார்க்,

20 அணிகள் கலந்து கொண்டுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய நேரப்படி நேற்று இரவு 8 மணிக்கு நியூயார்க்கில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் இந்திய அணி நிர்ணயித்த 120 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 6 ரன் வித்தியாசத்தில் இந்தியா திரில் வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஜஸ்ப்ரீத் பும்ரா 3 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். பும்ராவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில் ஐ.சி.சி. தொடர்களில் ஒவ்வொரு போட்டியிலும் சிறந்து விளங்கும் இந்திய பீல்டருக்கு பி.சி.சி.ஐ. விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அதன்படி நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியாவின் சிறந்த பீல்டர் விருதை விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தட்டிச்சென்றார்.

இதையடுத்து அந்த விருதை இந்திய முன்னாள் வீரரும், பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி ரிஷப் பண்டுக்கு அணிவித்தார். இது தொடர்பான வீடியோவை பி.சி.சி.ஐ தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்