டி20 உலகக் கோப்பை: வங்காளதேச வீரர் லிட்டன் தாஸ் புதிய சாதனை

லிட்டன் தாஸ் 21 பந்துகளில் அரைசதம் கடந்து இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக விளங்கி வந்தார்.

Update: 2022-11-02 17:42 GMT

Image tweeted by ICC

அடிலெய்டு,

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா-வங்காளதேசம் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி கோலி, ராகுல் சூர்யகுமார் ஆகியோரின் அதிரடியால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் களமிறங்கியது. போட்டியில் மழை குறுக்கிட்டதால் டக்ஒர்த் லூயிஸ் முறைப்படி, வங்காளதேச அணி 16 ஓவர்களில் 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அந்த அணியால் 15 ஓவர்கள் முடிவில் 145 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் இந்திய அணி டக்ஒர்த் லூயிஸ் முறைப்படி 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் ஒரு கட்டத்தில் வங்காளதேச அணி சேசிங்யின் போது அந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. குறிப்பாக அந்த அணியின் தொடக்க வீரர் லிட்டன் தாஸ் 21 பந்துகளில் அரைசதம் கடந்து இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக விளங்கி வந்தார். அவர் ஆட்டமிழந்த வங்காளதேச அணி விக்கெட் சரிவை சந்தித்து தோல்வி அடைந்தது. சிறப்பாக விளையாடிய லிட்டன் 27 பந்துகளில் 60 ரன்கள் குவித்து மிரட்டினார்.

இன்றைய போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் லிட்டன் தாஸ் பல சாதனைகளை படைத்துள்ளார். அந்த வகையில் சர்வதேச டி20 போட்டிகளில் அதிவேக அரைசதம் அடித்த வங்காளதேச வீரர்கள் பட்டியலில் லிட்டன் தாஸ் 2-வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். 2007 டி20 உலகக் கோப்பையில், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக வங்காளதேச வீரர் அஷ்ரபுல் 20 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து இந்த பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.

இதுமட்டுமின்றி டி20ஐ போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக மூன்றாவது அதிவேக அரைசதம் அடித்த வீரர் என்ற பெருமையையும் லிட்டன் பெற்றுள்ளார். இந்தியாவுக்கு எதிராக அதிவேக அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியலில் கேமரூன் கிரீன் (19 பந்துகள்- 2022 ஆம் ஆண்டு) முதல் இடத்திலும், ஜான்சன் சார்லஸ் (20 பந்துகள் - 2016 ஆம் ஆண்டு) உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்